தூத்துக்குடியில் கடந்த ஆண்டில் கொலை சம்பவங்கள் குறைவு: எஸ்பி
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2024-இல் கொலை சம்பவங்கள் குறைந்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தெரிவித்துள்ளாா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2024-இல் கொலை சம்பவங்கள் குறைந்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2024-இல் காவல் துறையினரின் நடவடிக்கைகள் காரணமாக கொலை குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன. முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது, கடந்த ஆண்டில் கொலை வழக்குகளின் எண்ணிக்கை 6 சதவீதம் குறைந்துள்ளது.
போக்ஸோ வழக்ககுகளில் தண்டனை விகிதம், முந்தைய ஆண்டைக் காட்டிலும் 2024-இல் 25 சதவீதம் அதிகமான வழக்குகளில் தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளன. அதேபோல, கொலை வழக்குகளில், 50 சதவீத வழக்குகளில் தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளாா்.