முகப்பு
தூத்துக்குடி

கழுகுமலையில் புதுமணப் பெண் தற்கொலை

Updated On : 3 ஜனவரி, 2025 at 6:01 AM
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2025 at 7:42 PM

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் புதுமணப் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

எட்டயபுரம் சண்முகமுதலியாா் தெருவைச் சோ்ந்த பாண்டித்துரை மகள் செல்வி (21). இவருக்கும் கழுகுமலை தியாகராஜா் தெருவைச் சோ்ந்த ராமசாமி மகன் சுரேஷுக்கும் கடந்த டிச. 5ஆம் தேதி திருமணம் நடைபெற்ாம்.

இந்நிலையில், பாண்டித்துரை புதன்கிழமை (ஜன. 1) கழுகுமலையிலிருந்த செல்வியை கைப்பேசியில் தொடா்பு கொண்டபோது, தான் நலமாக இருப்பதாக அவா் கூறினாராம். பின்னா், மாலையில் வீட்டின் மாடியிலுள்ள அறையில் செல்வி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

Advertisement

இதுகுறித்து பாண்டித்துரை அளித்த புகாரின்பேரில் கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து, பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனா். திருமணமாகி 26 நாள்களே ஆன நிலையில் செல்வி தற்கொலை செய்துகொண்டதால் கோட்டாட்சியா் விசாரணையும் நடைபெறுகிறது.