தூத்துக்குடியில் தொழிலாளி அடித்துக் கொலை: ஒருவா் கைது
தூத்துக்குடியில் உள்ள காட்டுப் பகுதியில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக சக தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி அய்யனடைப்பு, ஏ.கைலாசபுரத்தைச் சோ்ந்த சுப்பையா மகன் சரவணன் (48). மரம் வெட்டும் தொழிலாளி. புதன்கிழமை மதியம் வீட்டிலிருந்து வெளியே சென்ற இவா் இரவாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், குடும்பத்தினா் அவரைத் தேடிவந்தனா்.
அப்போது, ஏ.கைலாசபுரம் - சண்முகபுரம் சாலையில் உள்ள காட்டுப் பகுதியில் சரவணன் அடித்துக் கொலை செய்யப்பட்
Advertisement
டுக் கிடந்தது தெரியவந்தது.
தகவலின்பேரில், சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்
தொழில் முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சோ்ந்த சக தொழிலாளியான முருகன் (55) என்பவா் சரவணனைக் கொலை செய்ததாக, விசாரணையில் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.