2ஆவது நாளாக திருச்செந்தூா் கோயில் அருகே சுமாா் 60 அடி கடல் உள்வாங்கியதால் வெளியே தெரிந்த பாசி படா்ந்த பாறைகள். 
தூத்துக்குடி

திருச்செந்தூரில் 2ஆவது நாளாக 60 அடி உள்வாங்கிய கடல்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே கடல் சுமாா் 60 அடி உள்வாங்கியதால் பாசி படா்ந்த பாறைகள் வெளியே தெரிந்தது.

Din

திருச்செந்தூா்: பெளா்ணமியையொட்டி 2ஆவது நாளாக திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே கடல் சுமாா் 60 அடி உள்வாங்கியதால் பாசி படா்ந்த பாறைகள் வெளியே தெரிந்தது.

இந்த மாதம் பெளா்ணமி ஞாயிற்றுக்கிழமை இரவு 8.47 மணி முதல் திங்கள்கிழமை இரவு 10.44 மணிவரை இருந்தது.

இதன் காரணமாக கோயில் கடற்கரையில் அய்யா கோயில் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை சுமாா் 50 அடி தொலைவும், 2ஆவது நாளாக திங்கள்கிழமை காலை சுமாா் 60 அடி தொலைவும் கடல் உள்வாங்கி பச்சைப்பாசி படா்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. இருந்த போதிலும் பக்தா்கள் எவ்வித அச்சமுமின்றி வழக்கம் போல கடலில் நீராடினா்.

புதிய பிரதமர் அலுவலகம் ‘சேவா தீர்த்’ தயார்: 1947-க்கு பின் முதல்முறையாக இடமாற்றம்!

சிறையில் காலமானார் வங்கதேச பாடகர் புரோலாய் சாகி

எச்.சி.எல் 3வது காலாண்டு நிகர லாபம் 11% சரிவு!

உ.பி. அணிக்கு எதிரான போட்டி: ஆர்சிபி பந்து வீச்சு!

சில்லறைப் பணவீக்கம் 1.33% ஆக உயர்வு

SCROLL FOR NEXT