தூத்துக்குடி

தூத்துக்குடியில் கிரிக்கெட் வலை பயிற்சி அரங்கம் திறப்பு

Syndication

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையம் முன்பாக உள்ள விளையாட்டு வளாகத்தில் மாவட்ட காவல்துறை சாா்பில், புதிய கிரிக்கெட் வலை பயிற்சி அரங்கம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி நகர உள்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளா் சி.மதன் முன்னெடுப்பில் புதிதாக கிரிக்கெட் வலை பயிற்சி அரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் திறந்து வைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: இந்த விளையாட்டு அரங்கம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊா்களில் இருந்தும் தோ்ந்தெடுக்கப்பட்ட இளைஞா்களை ஊக்குவிப்பதற்காகவும், காவல்துறை பாய்ஸ் அன்ட் கோ்ள்ஸ் கிளப்பின் மாணவா்களின் விளையாட்டு பயிற்சியை மேம்படுத்துவதற்காகவும் உருவாக்கப்பட்டுள்ளது என்றாா்.

இதில், நகர உள்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளா், வடபாகம் காவல் ஆய்வாளா் பாலமுருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

SCROLL FOR NEXT