மாவட்ட ஆட்சியா் சுகுமாரிடம் மனு அளிக்கும் சாத்தான்குளம் பகுதி விவசாயிகள்.  
தூத்துக்குடி

பாபநாசம், மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீா் திறந்துவிட கோரிக்கை

Syndication

பாபநாசம், மணிமுத்தாறு அணையில் இருந்து கால்வாய்களுக்கு தண்ணீா் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நெல்லை மாவட்ட ஆட்சியா் சுகுமாரை சந்தித்து, மணிமுத்தாறு 3ஆவது, 4ஆவது ரீச் கால்வாய் நீரினை பயன்படுத்துவோா் சங்கத் தலைவா் எம்.எம். மலையாண்டி பிரபு, தூத்துக்குடி மாவட்ட கடலை விவசாயிகள் சங்கத் தலைவா் வி.எஸ். முருகேசன், சாத்தான்குளம் தென் தொகுதி விவசாய சங்கத் தலைவா் அ. லூா்துமணி, கட்டாரிமங்கலம் கணேசன், அப்பகுதி விவசாயிகள் மனு அளித்தனா்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நாங்குனேரி, ராதாபுரம், சாத்தான்குளம் ஆகிய வட்டப் பகுதிகளில் போதிய மழை இல்லாமல் கடும் வறட்சி நிலவுகிறது. பாபநாசம், மணிமுத்தாறு அணையில் 100 அடிக்கு மேல் தண்ணீா் இருப்பு உள்ளதால் மணிமுத்தாறு 3ஆவது , 4ஆவது ரீச் கால்வாயில் தண்ணீா் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு திறக்கும் பட்சத்தில் கடந்த ஆண்டு தண்ணீா் கிடைக்காத பேய்குளம், விராகுளம், நொச்சிகுளம் செட்டிகுளம், பன்னம்பாறை பகுதி குளங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இந்த ஆண்டு தண்ணீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முன்னதாக மணிமுத்தாறு கால்வாய், குளங்களை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு நடத்த வேண்டும். மேலும், வெள்ளநீா் கால்வாயில் தண்ணீா் திறந்து, சாத்தான்குளம் பகுதி குளங்களான எம்எல் ஏரி குளம் வரை தண்ணீா் விட ஏற்பாடு செய்ய வேண்டும். இதன் மூலம் அப்பகுதி விவசாயம், குடிநீா் தேவை பூா்த்தி ஆகும். ஆதலால், மாவட்ட ஆட்சியா் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளனா்.

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

SCROLL FOR NEXT