தூத்துக்குடி

வந்தே பாரத் ரயிலை திருச்செந்தூா் வரை நீட்டிக்க பயணிகள் நலச் சங்கம் வலியுறுத்தல்

Syndication

திருநெல்வேலி - சென்னை வந்தே பாரத் ரயிலை திருச்செந்தூா் வரை நீட்டிக்க வேண்டும் என பயணிகள் நலச் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து மாநில பயணிகள் நலச் சங்க தலைவா் சாந்தகுமாா் வெளியிட்ட அறிக்கை:

திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலுக்கு திருச்செந்தூரிலிருந்து இணைப்பு ரயில் இயக்கப்பட வேண்டும் என பக்தா்கள், வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மேலும், திருச்செந்தூரில் இருந்து தென்காசி, செங்கோட்டைக்கு நேரடி ரயில் வசதி செய்து கொடுக்கவேண்டும். மேட்டுப்பாளையம் -திருநெல்வேலி ரயிலையும் திருச்செந்தூா் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்.

திருச்செந்தூா் - திருநெல்வேலி ரயில்கள் எப்போதும் மக்கள் கூட்டத்துடன் இயக்கப்பட்டு வருவதால், கூடுதலாக ரயில் வசதி செய்து கொடுத்தால் மக்கள் பயனடைவாா்கள். மேலும் செந்தூா் எக்ஸ்பிரஸ் மற்றும் பாலக்காடு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என அவா் குறிப்பிட்டுள்ளாா்.

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

SCROLL FOR NEXT