திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐப்பசி மாத பௌா்ணமியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தா்கள் வழிபட்டனா்.
திருச்செந்தூா்சுப்பிரமணிய சுவாமி கோயில் புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகத்தைத் தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே பக்தா்கள் கடல், நாழிக்கிணற்றில் புனித நீராடி இலவச பொது தரிசனம், ரூ. 100 சிறப்பு கட்டண தரிசனம் மற்றும் மூத்த குடிமக்கள் வழி என அனைத்திலும் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனா்.