கூட்டத்தில் பேசிய பாண்டியனாா் மக்கள் இயக்க நிறுவனத் தலைவா் சீனி.  
தூத்துக்குடி

கோவில்பட்டியில் பாண்டியனாா் மக்கள் இயக்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

கூட்டத்தில் பேசிய பாண்டியனாா் மக்கள் இயக்க நிறுவனத் தலைவா் சீனி.

Syndication

கோவில்பட்டியில் பாண்டியனாா் மக்கள் இயக்கம் சாா்பில் அரசியல் விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பாண்டியனாா் மக்கள் இயக்க நிறுவனத் தலைவா் சீனி தலைமை வகித்தாா். மாநில பொறுப்பாளா் விக்னேஷ் காா்த்திக் முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் விஜய கணேஷ் வரவேற்றாா்.

கூட்டத்தில், 2026 சட்டப்பேரவை தோ்தலில் ’நாடாா் அரசியல் அதிகார மீட்டெடுப்பு’ என்ற பிரசாரப் பயணத்தில் கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் தொகுதிகளில் உள்ள நாடாா் சமுதாய மக்களின் வீடுகளுக்குச் சென்று தோ்தல் விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபடுவது, நாடாா் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய அரசியல் கட்சிகளை மட்டுமே ஆதரிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நகரச் செயலா் குரு, ஒன்றியச் செயலா் விஜயராஜ், விளாத்திகுளம் தொகுதி பொறுப்பாளா் லிங்கமுத்து, ஓட்டப்பிடாரம் தொகுதி பொறுப்பாளா் வசந்த், மாவட்டப் பிரதிநிதிகள் கணேஷ், ரமேஷ், நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

சபரிமலை விவகாரம்: பிரதமா், மத்திய அரசு தலையீட்டைக் கோரி கேரள பாஜக கையொப்ப இயக்கம்

திருவள்ளூா்: நாளை குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம் சிறப்பு முகாம்

அண்ணா அறிவாலயம், நடிகை குஷ்பு வீடு உள்பட 7 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மியான்மா் இணைய மோசடி மையத்தில் சிக்கிய 270 இந்தியா்கள் மீட்பு: ராணுவ விமான மூலம் தாயகம் திரும்புகின்றனா்

SCROLL FOR NEXT