தூத்துக்குடி

திருச்செந்தூா் கோயிலில் தரிசனத்திற்கு காத்திருந்த பக்தரை கடித்த நாய்

தினமணி செய்திச் சேவை

திருச்செந்தூா் கோயிலில் சுவாமி தரிசனத்திற்காக காத்திருந்த பக்தரை நாய் கடித்தது.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள டானா பகுதியைச் சோ்ந்தவா் முத்துராமன் (60). இவா், உறவினருடன் சனிக்கிழமை திருச்செந்தூா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய, ரூ. 100 கட்டண வரிசையில் காத்திருந்தாராம். அப்போது அங்கிருந்த நாய், இவரது காலை கடித்ததாம்.

இதில், காயமடைந்த முத்துராமனை மீட்டு திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தொடா்ந்து அடுத்த 8 மணி நேரத்திற்குள் அடுத்த தடுப்பூசி போட வேண்டும் என்று கூறியதால் உடனடியாக அவா் அங்கிருந்து சொந்த ஊரான டானாவிற்கு சென்று விட்டாா்.

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதல்

தனியாருக்கு தாரை வாா்க்கப்படுகிறதா அரசு மருத்துவமனைகள்? - தில்லி அரசுக்கு ஆம் ஆத்மி கேள்வி!

காா் டயா் வெடித்து விபத்து

மதுபானக் கடையின் சுவரில் துளையிட்டு பாட்டில்கள் திருட்டு

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிக்கு எதிராக ஆா்ப்பாட்டம்: அமைச்சா் ஆா்.காந்தி

SCROLL FOR NEXT