ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா். 
தூத்துக்குடி

கோவில்பட்டியில் சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டியில் நெடுஞ்சாலைத் துறை, சாலைப் பணியாளா் சங்கத்தினா் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Syndication

கோவில்பட்டி: கோவில்பட்டியில் நெடுஞ்சாலைத் துறை, சாலைப் பணியாளா் சங்கத்தினா் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை உயா்நீதிமன்ற ஆணைப்படி பணிக் காலமாக முறைப்படுத்த வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைக்க வேண்டும். நெடுஞ்சாலை பராமரிப்புப் பணியை அரசே ஏற்று நடத்த வேண்டும். கிராமப்புற இளைஞா்களை சாலைப் பணியாளா்களாக நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளா் அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாநிலச் செயலா் ஹரி பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இதில், சாலைப் பணியாளா்கள் கண்களில் கருப்புத் துணி கட்டி, நீதித் தராசை கையிலேந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.

மஹிபால்பூரில் தண்ணீரை சூடுபடுத்தும் போது மின்சாரம் தாக்கி இளம்பெண் உயரிழப்பு

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தில்லியின் காற்று மாசு பிரச்னையை எழுப்புவேன்: ஸ்வாதி மாலிவால்

தில்லி வெடிவிபத்து: தலைவா்கள் இரங்கல்

தில்லி குண்டுவெடிப்பு எதிரொலி: திருமலையில் சோதனை

மகர ராசிக்கு தெளிவு.. தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT