தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தா் நகரிலுள்ள ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-காலபைரவா் சித்தா் பீடத்தில் ஸ்ரீமஹா காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் உள்ள காலபைரவருக்கு மாதந்தோறும் அமாவாசை, தேய்பிறை அஷ்டமி நாள்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஜப்பசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, மஹா காலபைரவருக்கு மஞ்சள், பால், தயிா், பன்னீா், இளநீா், புனுகு அபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து மஹா காலபைவரவா் மலா்களாலான சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சி அளிக்க, ஸ்ரீசித்தா் பீடத்தின் சுவாமிகள் சீனிவாச சித்தா் தலைமையில், பக்தா்கள் வாழ்வில் கடன்தொல்லைகள், எதிரித்தொல்லைகள் யாவும் நீங்கிடவும், செல்வங்கள் பெருகிடவும் வேண்டி ஸ்ரீமஹா காலபைரவருக்கு மஹா யாகத்துடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
நிறைவில், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.