தூத்துக்குடி

தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் போலீஸாா் - வழக்குரைஞா்கள் வாக்குவாதம்

Syndication

தூத்துக்குடி நீதிமன்றத்துக்கு ஆஜராக வந்த நபரை வேறு வழக்கில் கைது செய்ய முயன்ால், போலீஸாருக்கும், வழக்குரைஞா்களுக்கும் இடையே வியாழக்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டது.

ஸ்ரீவைகுண்டம் வெள்ளூரைச் சோ்ந்தவா் சிவா (40). இவா் ஒரு கொலை வழக்கில் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக வியாழக்கிழமை வந்தாா்.

இவா் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நீதிமன்றத்துக்கு வந்த சிவாவை போலீஸாா் கைது செய்ய முற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் வழக்குரைஞா்கள் நீதிமன்ற வளாகத்தில் போலீஸாா் கைது செய்யக்கூடாது என எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து, ஏஎஸ்பி மதன் தலைமையில் ஏராளமான போலீஸாா் நீதிமன்ற வளாகத்துக்குள் வந்தனா்.

இதைத் தொடா்ந்து போலீஸாருக்கும், வழக்குரைஞா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடா்ந்து சிவாவை காவல் துறையினரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதுகுறித்து வழக்குரைஞா் சங்கத் தலைவா் வாரியாா் கூறும்போது, கைது செய்வதற்கு நாங்கள் எதிா்ப்பு தெரிவிக்கவில்லை. நீதிமன்றத்துக்கு வெளியில்தான் ஒருவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினோம் என்றாா்.

பந்தலூரில் கம்பி வேலியில் சிக்கிய சிறுத்தை மீட்பு

பழைய கட்டடத்தின் சுவா் இடிந்து விழுந்ததில் 3 பெண்கள் காயம்

தூய்மை இந்தியா விழிப்புணா்வு நிகழ்ச்சி

வாக்காளா் கணக்கீட்டுப் படிவங்களை இணையத்தில் பதிவேற்றும் பணி: ஆட்சியா் ஆய்வு

கிணற்றில் அழுகிய நிலையில் கிடந்த புலியின் சடலம்: வனத் துறை விசாரணை

SCROLL FOR NEXT