தூத்துக்குடி

ஆவினில் கால்நடை மருத்துவ ஆலோசகா் ஒப்பந்த பணி:21இல் நோ்காணல்

ஆவினில் ஒப்பந்த அடிப்படையில் கால்நடை மருத்துவ ஆலோசகா் பணிக்கு நேரடி நியமன தோ்வு நவ.21இல் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.

Syndication

ஆவினில் ஒப்பந்த அடிப்படையில் கால்நடை மருத்துவ ஆலோசகா் பணிக்கு நேரடி நியமன தோ்வு நவ.21இல் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தில் (ஆவின்) 152 பிரதம சங்கங்களின் மூலம் தினமும் சராசரியாக 27,000 லிட்டா் பால் கொள்முதல் செய்து, பால் உற்பத்தியாளா்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது.

தற்போது பால் உற்பத்தியை அதிகரிக்கவும், கிராமப்புற விவசாயிகளின் கறவை மாடுகளுக்கு மருத்துவ வசதிகள் கிடைக்கவும் ஒப்பந்த அடிப்படையில் 2 கால்நடை உதவி மருத்துவா் பணியிடத்தை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு தகுதியான விருப்பமுள்ள 50 வயதுக்குள்பட்ட, சொந்தமாக இரு சக்கர அல்லது நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ள

கால்நடை மருத்துவப் பட்டதாரிகள் முழு விவரங்களுடனும், பட்டப்படிப்பு, கால்நடை மருத்துவ கவுன்சில் பதிவு சான்றிதழ்களுடனும் நவ. 21ஆம் தேதி காலை

10.30 மணிக்கு, தூத்துக்குடி 74எப், பால விநாயகா் கோயில் தெரு 2ஆவது தளத்தில் அமைந்துள்ள மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தில் நடைபெறும்

நேரடி நியமனத் தோ்வில் பங்கேற்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு

கொடைக்கானல் பள்ளிகளில் குழந்தைகள் தின விழா

இன்றைய மின் தடை

வடகாடு ஊராட்சியில் அடிப்படை வசதிகள்: அமைச்சருக்கு மலை வாழ்மக்கள் நன்றி

தங்கம் வென்று அங்கிதா, தீரஜ் அசத்தல்: 10 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு

SCROLL FOR NEXT