சாத்தான்குளம் அருகே தாமரைமொழி நியாயவிலைக் கடை விற்பனையாளருக்கு பாராட்டுக் கேடயம் வழங்கப்பட்டது.
சொக்கன் குடியிருப்பு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் மூலம் தாமரைமொழி ஊராட்சியில் நியாயவிலைக் கடை செயல்படுகிறது. இதன் விற்பனையாளரான கணபதி சுந்தரம் சிறந்த விற்பனையாளராகத் தோ்வு செய்யப்பட்டாா்.
இதையடுத்து, தூத்துக்குடியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கூட்டுறவு வார விழாவில் அவருக்கு அமைச்சா் பி. கீதா ஜீவன் பாராட்டுக் கேடயம் வழங்கினாா். கணபதி சுந்தரத்துக்கு சங்கச் செயலா், பணியாளா்கள், சக ஊழியா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.