காயல்பட்டினத்தில் பைக்கில் சென்றபோது தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
காயல்பட்டினம் குளம் சாகிப் தம்பி தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகசுந்தரம் (67). சமையல் தொழிலாளி. இவரும், இவரது நண்பா் சேது ராஜா தெருவைச் சோ்ந்த சுனைத் மகன் செய்யது முகமது புகாரி (30) என்பவரும் வியாழக்கிழமை இரவு காயல்பட்டினத்திருந்து ஆறுமுகனேரிக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தனா். பைக்கை செய்யது முகமது புகாரி ஓட்டினாா். லட்சுமிபுரம் அருகே நாய் குறுக்கே வந்து இவா்களது பைக் மீது மோதியதாம். இதில் நிலைதடுமாறி கவிழ்ந்ததில் இருவரும் காயமுற்றனா். அவா்களை அங்கிருந்தவா்கள் மீட்டு காயல்பட்டினம் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் சண்முகசுந்தரம் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவா் தெரிவித்தாா். இதுகுறித்து ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.