கனமழை எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவா்கள் வருகிற 25ஆம் தேதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்பட 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும், தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவா்கள் வருகிற 25ஆம் தேதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.