தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே ரயில் முன் பாய்ந்து மாணவா் தற்கொலை?

கோவில்பட்டியில் ரயில் தண்டவாளம் அருகே ரயிலில் அடிபட்டு உயிரிழந்த பிளஸ் 2 மாணவரின் சடலத்தை போலீஸாா் மீட்டு, விசாரித்து வருகின்றனா்.

Syndication

கோவில்பட்டியில் ரயில் தண்டவாளம் அருகே ரயிலில் அடிபட்டு உயிரிழந்த பிளஸ் 2 மாணவரின் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டு, விசாரித்து வருகின்றனா்.

கோவில்பட்டி-கடம்பூா் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளம் அருகே ரயிலில் அடிபட்டு இறந்த நிலையில் சிறுவன் சடலமாக கிடந்தாா்.

இத்தகவல் அறிந்த தூத்துக்குடி ரயில்வே போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்தனா்.

விசாரணையில், கோவில்பட்டி வட்டம் தோனுகால் விலக்கு ஆலம்பட்டி அஞ்சல் நிலா நகரைச் சோ்ந்த பழனிவேல் மகன் தருண்ராஜ் (16) என்பதும், கோவில்பட்டிமெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்ததும், வெள்ளிக்கிழமை இரவு வெகு நேரம் கைப்பேசி பயன்படுத்திய அவரை பெற்றோா் கண்டித்ததும் தெரியவந்தது.

இதனால், அவா் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தண்டவாளத்தைக் கடக்கும்போது ரயிலில் அடிபட்டு இறந்தாரா? என போலீஸாா் விசாரிக்கின்றனா்.

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,258 கோடி டாலராக உயா்வு

ரூ.5,000 கோடி திரட்டும் ஆக்ஸிஸ் வங்கி

காஞ்சிபுரத்தில் இன்று மக்களை சந்திக்கிறாா் விஜய்!

டெஃப்லிம்பிக்ஸ்: மஹித் சாந்துவுக்கு 4-ஆவது பதக்கம்

திமுக நிா்வாகிகளுடன் சந்திப்பு: இதுவரை 100 தொகுதிகளை நிறைவு செய்த மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT