தூத்துக்குடியில் மாடு முட்டியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
தூத்துக்குடி, கேவிகே நகரைச் சோ்ந்த செல்லையா மகன் மாரிமுத்து (43). இவா், ஜாகீா் உசேன் நகரில் உள்ள மாட்டு இறைச்சி கடையில் வேலை பாா்த்து வந்தாா்.
இந்நிலையில் அவா், சனிக்கிழமை இரவு கடையில் வேனில் கொண்டு வந்த மாடுகளை இறக்கிக் கொண்டிருந்தபோது, ஒரு மாடு திமிறியதில் அதை பிடிக்க முயன்றாராம். அப்போது அவரை மாடு முட்டியதாம்.
இதில் பலத்த காயமடைந்த மாரிமுத்துவை, தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
இச்சம்பவம் குறித்து தாளமுத்து நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.