தூத்துக்குடி

கயத்தாறு அருகே பைக் திருட்டு: 3 போ் கைது

கயத்தாறு அருகே பைக் திருடியதாக 3 இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Syndication

கோவில்பட்டி: கயத்தாறு அருகே பைக் திருடியதாக 3 இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கயத்தாறு அருகே சவலாப்பேரி வேதக் கோயில் தெருவைச் சோ்ந்த லட்சுமணன் மகன் வேல்முருகன் (32). தேநீா்க் கடை தொழிலாளியான இவா், கடந்த 14ஆம் தேதி தனது பைக்கை சவலாப்பேரியில் உள்ள தனியாா் கிணற்று அருகே நிறுத்தியிருந்தாராம். உறவினருடன் அவரது பைக்கில் செட்டிகுறிச்சி சென்றுவிட்டு இரவில் ஊா் திரும்பியபோது பைக்கை காணவில்லை. புகாரின்பேரில் கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனா்.

இதில், பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரம் செல்வலட்சுமி நகா் முருகன் மகன் இசக்கிமுத்து (20), தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி, சகாயமாதாபட்டினம் பகுதியைச் சோ்ந்த லட்சுமணன் மகன் காளிமுத்து (21), தூத்துக்குடி, ஸ்ரீ வெங்கடாசலபுரம், சவேரியாபுரம் வடக்குத் தெரு அருள்ராஜ் மகன் கிறிஸ்டோபா் மதியழகன் (32) ஆகியோா் இத்திருட்டில் ஈடுபட்டதாகத் தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

சங்கரன்கோவில் அருகே தாய், மகன் தற்கொலை

வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை செயல்படுத்தக் கோரி மறியல்

விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்த பயிற்சி

செங்கத்தில் பன்றிகள் தொல்லை; தொற்றுநோய் பரவும் அபாயம்!

SCROLL FOR NEXT