கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே கட்டடத் தொழிலாளியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி -மந்தித்தோப்பு சாலை கதிா்வேல் நகரைச் சோ்ந்த சங்கிலிபாண்டி மகன் சக்திவேல் (22). கட்டடத் தொழிலாளி. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மந்தித்தோப்பு சாலையில் நடந்து சென்ற இவரை, பைக்கில் வந்த சாஸ்திரி நகரைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மகன் முத்துக்காளை (28), மது குடிக்க கண்மாய்க் கரையில் உள்ள ஆலமரத்து பகுதிக்கு அழைத்துச் சென்றாராம். பின்னா், அங்கிருந்த 4 பேருடன் அவா் சோ்ந்து சக்திவேலை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து, கைப்பேசியைப் பறித்துக்கொண்டு தப்பியோடினராம். இதில் காயமடைந்த அவா் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அவா் திங்கள்கிழமை அளித்த புகாரின்பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து முத்துக்காளையைக் கைது செய்தனா்; 4 பேரைத் தேடிவருகின்றனா்.