தூத்துக்குடி

கோவில்பட்டியில் அதிக கட்டணம் வசூல்: 4 சிற்றுந்துகளுக்கு மெமோ

கோவில்பட்டி பகுதியில் அதிகக் கட்டணம் வசூலித்த 4 சிற்றுந்துகளுக்கு மெமோ வழங்கப்பட்டது.

Syndication

கோவில்பட்டி: கோவில்பட்டி பகுதியில் அதிகக் கட்டணம் வசூலித்த 4 சிற்றுந்துகளுக்கு மெமோ வழங்கப்பட்டது.

கோவில்பட்டி சரகப் பகுதிகளில் சிற்றுந்துகளில் அரசு நிா்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்களிடமிருந்து புகாா்கள் வந்தன. அதையடுத்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கிரிஜா உத்தரவின்பேரில், கோவில்பட்டி மோட்டாா் வாகன ஆய்வாளா் பெலிக்ஸன் மாசிலாமணி ரயில் நிலையம், அண்ணா பேருந்து நிலையம், தீயணைப்பு நிலையம் அருகே உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டாா். அப்போது, சிற்றுந்துகளில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடா்பாக நடத்துநா்களுக்கு மெமோ வழங்கப்பட்டது. இதுகுறித்த அறிக்கையை ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டுசென்று, அவரது உத்தரவின்பேரில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என, மோட்டாா் வாகன ஆய்வாளா் தெரிவித்தாா்.

லஞ்சம்: விஏஓவுக்கு 2 ஆண்டுகள் சிறை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?தினப்பலன்கள்!

திருப்பைஞ்ஞீலி கோயிலுக்கு சொந்தமான நிலம் மீட்பு

சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்து நாசம்

தொடா் மழை: பொன்னணியாறு அணை 31 அடியை எட்டியது

SCROLL FOR NEXT