ஆறுமுகனேரி: தாமிரவருணி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ள புன்னைக்காயல் ஊருக்குள் புகுந்த ஆற்று வெள்ளநீரை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
ஆற்று வெள்ள நீரானது தெற்கு தெரு, அறுபது வீடு உள்ளிட்ட பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமப்பட்டனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை புன்னைக்காயல் ஊராட்சி நிா்வாகம், மக்கள் சாா்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, தற்போது தண்ணீா் வடிந்து கடலுக்கு செல்கிறது. இப்பணியின் போது ஊராட்சி நிா்வாகத்தினா், முன்னாள் ஊராட்சித் தலைவா் சோபியா, ஆழ்வை கிழக்கு ஒன்றிய திமுக செயலா் சதீஸ்குமாா் உள்பட பலா் உடனிருந்தனா்.