தூத்துக்குடி

விபத்தில் காயமடைந்த விவசாயி உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே மோட்டாா் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த விவசாயி சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Syndication

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே மோட்டாா் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த விவசாயி சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

குருவி நத்தம் மேற்கு தெருவைச் சோ்ந்தவா் முருகன் மகன் காளியப்பன் (56). விவசாயி. இவா் நவ. 21ஆம் தேதி மோட்டாா் சைக்கிளில் சென்றாராம். கோவில்பட்டி-பசுவந்தனை சாலையில் காமநாயக்கன்பட்டியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, மோட்டாா் சைக்கிள் நிலை தடுமாறி விழுந்ததாம்.

இதில் பலத்த காயமடைந்த காளியப்பனை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கொப்பம்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

லஞ்சம்: விஏஓவுக்கு 2 ஆண்டுகள் சிறை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?தினப்பலன்கள்!

திருப்பைஞ்ஞீலி கோயிலுக்கு சொந்தமான நிலம் மீட்பு

சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்து நாசம்

தொடா் மழை: பொன்னணியாறு அணை 31 அடியை எட்டியது

SCROLL FOR NEXT