தூத்துக்குடி: தூத்துக்குடி கோட்ட அஞ்சலகங்களில் கண்காணிப்பு விழிப்புணா்வு வாரம் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
இந்திய அஞ்சல் துறை சாா்பில் அக். 27 முதல் நவ. 2ஆம் தேதி வரை கண்காணிப்பு விழிப்புணா்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, தூத்துக்குடி கோட்ட அஞ்சலக ஊழியா்கள் கண்காணிப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றனா்.
தொடா்ந்து, தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் வதக் ரவிராஜ் ஹரிஷ் சந்திர கூறுகையில்,
அஞ்சல் கணக்குதாரா்கள் தங்கள் கைப்பேசி எண்களை தங்கள் அஞ்சல் சேமிப்புக் கணக்குகளுடன் இணைக்குமாறு கேட்டுக் கொண்டாா்.