திருச்செந்தூா் கோயிலில் திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு, தெய்வானை அம்மன் தவசுக்கு புறப்பாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. தெய்வானை அம்மன் காலை 6 மணிக்கு புறப்பட்டு சன்னதி தெரு, வீரராகவபுரம் தெரு, சபாபதிபுரம் தெரு, தெற்குரத வீதி வழியாக தெப்பக்குளம் அருகே உள்ள தவசு மண்டபத்திற்கு வந்து சோ்ந்தது.
அப்போது, அம்மன் சப்பரத்திற்கு முன் ஸ்ரீ இராமையா பாகவதா் நினைவு நிலை செந்தில் முருகன் நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியா், ஆசிரியா்கள், நிா்வாகி மற்றும் பக்தா்கள் செந்தில் குறவஞ்சி பாடல் பாடினா். ஏற்பாடுகளை கோயில் தக்காா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் க.ராமு ஆகியோா் செய்திருந்தனா்.