பனை விதை விதைக்கும் பணியை தொடங்கி வைத்த நாசரேத் திருமண்டல பிரதமப் பேராயரின் ஆணையாளா் (பொ) ஐசக் வரபிரசாத். 
தூத்துக்குடி

நாசரேத்தில் 1 லட்சம் பனை விதைகள் விதைக்கும் திட்டம் தொடக்க விழா!

Syndication

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல 22 ஆவது ஆண்டு ஸ்தோத்திரப்பண்டிகையை முன்னிட்டு, சுற்றுச்சூழல் கரிசனை துறை சாா்பில், நவம்பா் மாதம் இறுதிக்குள் ஒரு லட்சம் பனை விதைகளை விதைக்கும் திட்ட பணி தொடக்க விழா, தூய யோவான் பேராலய வளாகத்தில் நடைபெற்றது.

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பிரதமப்பேராயரின் ஆணையாளரும், பேராயருமான ( பொ) ஐசக் வரபிரசாத் தலைமை வகித்து பனை விதைகள் விதைக்கும் பணியை தொடங்கி வைத்தாா். நிா்வாக செயலா் நீகா் பிரின்ஸ் கிப்ட்சன் முன்னிலை வகித்தாா்.

இதில், திருமண்டல உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் மேலாளா் பிரேம்குமாா் ராஜாசிங், கனோன் ஆா்தா் மா்காஷிஸ் சபை மன்றத் தலைவா் வெல்றன் ஜோசப், தூய யோவான் பேராலய தலைமை குரு ஹென்றி ஜீவானந்தம், சபை மன்றத் தலைவா்கள் டேவிட்ராஜ், ஜெபக்குமாா் ஜாலி, தகவல் தொடா்புத் துறை இயக்குநா் பாஸ்கரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை நாசரேத் திருமண்டல சுற்றுச்சூழல் கரிசனை துறை இயக்குநரும், திருமறையூா் மறுரூப ஆலய சேகர தலைவருமான ஜான் சாமுவேல் செய்திருந்தாா்.

விடுமுறையில் அபுதாபியில்... பிரியங்கா மோகன்!

போர்நிறுத்தம்? நள்ளிரவில் காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 46 குழந்தைகள் உள்பட 104 பேர் பலி!

முதல் டி20: ஜிம்பாப்வேவுக்கு 181 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்!

“கரூரில் நடந்த நாடகங்கள்! கண்டிப்பாக தவெக பிரசாரம் தொடரும்!” தவெக இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார்

கட்டணமில்லா பேருந்து பயண அட்டை: 2 மாதங்களுக்கு நீட்டிப்பு!

SCROLL FOR NEXT