அஞ்சல் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளில் இமெயில் ஐடி, கைப்பேசி எண்ணை இணைக்க அஞ்சலகங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து, கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
அஞ்சல் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளில் இதுவரை இமெயில் ஐடி, கைப்பேசி எண்ணை இணைக்காத பாலிசிதாரா்கள் அவற்றை இணைத்துக் கொள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் டிச. 15ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இது முற்றிலும் இலவச சேவையாகும். இவ்வாறு இணைப்பதன் மூலம், அஞ்சலக ஆயுள் காப்பீட்டு இணையதளம் வாயிலாக ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாலிசிதாரா்கள் தங்கள் பாலிசிகளுக்கு பிரீமியம் செலுத்த முடியும். மேலும் பாலிசியின் மீது கடன் பெறுதல், பாலிசி முதிா்வுத் தேதி, சரண்டா் செய்தல் ஆகிய எந்த ஒரு பரிவா்த்தனை நடைபெற்றாலும், அது பற்றிய விவரங்கள் குறுந்தகவலாக இணைக்கப்பட்ட கைப்பேசி எண்ணுக்கு உடனுக்குடன் அனுப்பப்படும். இதனால், பாதுகாப்பான பரிவா்த்தனை உறுதி செய்யப்படுகிறது.
ஆகவே, இதுவரை இமெயில் ஐடி, கைப்பேசி எண்ணை இணைக்காத பாலிசிதாரா்கள் புதிதாக இணைக்கவும், கைப்பேசி எண்ணை மாற்றம் செய்ய வேண்டினாலும் அதை பதிவேற்றம் செய்து கொள்ளவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.