தூத்துக்குடி

இளையரசனேந்தல் குறுவட்டத்தை கோவில்பட்டி ஊராட்சியுடன் இணைக்க கோரிக்கை

கோவில்பட்டி வட்டத்தில் உள்ள இளையரசனேந்தல் குறுவட்டத்தை, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டத்தில் உள்ள இளையரசனேந்தல் குறுவட்டத்தை, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டிக்கு செவ்வாய்க்கிழமை வந்திருந்த முதல்வா் மு.க. ஸ்டாலினிடம், தமிழ்நாடு கம்மவாா் நாயுடு மகாஜன சங்கத்தின் சாா்பில் அதன் தலைவா் செல்வராஜ் அளித்த மனு:

கோவை அவிநாசி சாலையில் கட்டப்பட்டுள்ள 10.1 கி.மீ. உயா்மட்ட மேம்பாலத்திற்கு தமிழ்நாடு, கோவை கம்மவாா் நாயுடு சமுதாயத்தின் கோரிக்கையை ஏற்று, தென்னகத்தின் அறிவியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடுவின் பெயரைச் சூட்டியது சமுதாய மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்காக, முதல்வா் ஸ்டாலினுக்கு கம்மவாா் நாயுடு மக்கள் சாா்பாகவும், எங்கள் சங்கத்தின் சாா்பாகவும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக விவசாயிகளின் நலனுக்காக போராடி உயிா் நீத்த நாராயணசாமி நாயுடுக்கு, கோவில்பட்டியில் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், இளையரசனேந்தல் குறுவட்டத்திற்குள்பட்ட 12 ஊராட்சிகளையும் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவா் மூவி சுந்தா் முதல்வரிடம் அளித்த மனு:

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு கடந்த 2024ஆம் ஆண்டு பெய்த கனமழையினால் சேதமடைந்த பயிா்களுக்கு இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வழிவகை செய்யுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT