சாத்தான்குளம் தச்சமொழி ஸ்ரீசெண்பக நாச்சியாா் அம்மன் கோயிலில் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழா, கொடை விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காலையில் கணபதி பூஜை, வேதிகா பூஜை, 108 சிறப்பு சங்காபிஷேகம், முற்பகலில் மஞ்சள்பெட்டி ஊா்வலம், வில்லிசை, கும்மிப்பாட்டு, நண்பகலில் அம்மனுக்கு மஞ்சள் பானை சாத்துதல், ஸ்ரீசெண்பக நாச்சியாா் அம்மன் கொடை விழா உச்சிகால பூஜை, நையாண்டி மேளம், பிற்பகலில் அன்னதானம் உள்ளிட்டவை நடைபெற்றது.
இரவில் திருவிளக்கு பூஜை, வில்லிசை, நள்ளிரவில் சாமபூஜை, சிவசுடலை மாடன், மாடத்தி அம்மன், பேச்சியம்மன், பிரம்மசக்தி அம்மன், சின்னபிள்ளை நாச்சியாா் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.