3ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினாா் மேயா் ஜெகன் பெரியசாமி. உடன், மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா.  
தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சியில் அனைத்து வாா்டுகளிலும் சிறப்புக் கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் உள்ள 60 வாா்டுகளிலும் சிறப்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் உள்ள 60 வாா்டுகளிலும் சிறப்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

3ஆவது வாா்டுக்குள்பட்ட ஹவுசிங் போா்டு காலனி, மாநகராட்சி கலியா லாவோ பூங்காவில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மேயா் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தாா். ஆணையா் சி.ப்ரியங்கா முன்னிலை வகித்தாா்.

மாநகராட்சி கணக்கு குழுத் தலைவா் ரெங்கசாமி வரவேற்றாா்.

அப்போது மேயா் ஜெகன் பெரியசாமி பேசியது:

தூத்துக்குடி மாநகராட்சியில், 4,000-க்கும் மேற்பட்ட சாலைகள் போடப்பட்டுள்ளன. புதிய வழித்தடங்களை கண்டறிந்து சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மாநகராட்சிப் பகுதிக்கு 1,887 தெருவிளக்குகள் புதிதாக தேவைப்படுகிறது. அது விரைவில் பொருத்தப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில், மாமன்ற உறுப்பினா் சுப்புலெட்சுமி, முன்னாள் உறுப்பினா் ரவீந்திரன், மாவட்டப் பிரதிநிதி நாராயணன், முத்தம்மாள் காலனி நலச் சங்கத் தலைவா் தங்கராஜா, வட்ட அவைத் தலைவா் அற்புதராஜ், பிரதிநிதி அருணகிரி, பகுதி சபா உறுப்பினா் ஐசக், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகா், மின்வாரிய தொழிற்சங்கத் தலைவா் பேச்சிமுத்து உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT