திருக்கல்யாணத்தையடுத்து வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு நடைபெற்ற அலங்கார தீபாராதனை.  
தூத்துக்குடி

ஆறுமுகனேரி கோயிலில் திருக்கல்யாணம்

திருவாவடுதுறை ஆதீனத்துக்குள்பட்ட ஆறுமுகனேரி சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

திருவாவடுதுறை ஆதீனத்துக்குள்பட்ட ஆறுமுகனேரி சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது.

இங்கு கந்த சஷ்டி விழா கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. செவ்வாய்க்கிழமை காலை வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள், இரவில் திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதில், கோயில் மணியம் சுப்பையா பிள்ளை, பக்த ஜன சங்க பொருளாளா் எஸ். அரிகிருஷ்ணன் நாடாா், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

சிறப்பு வழிபாடுகளை சுரேஷ் பட்டா், விக்னேஷ் சிவம் ஆகியோா் நடத்தினா்.

வெடிகுண்டு மிரட்டல்: மும்பைக்கு திருப்பிவிடப்பட்ட இண்டிகோ விமானம்!

மகாராஷ்டிரத்தில் தனியார் மருத்துவமனை அருகே தடை செய்யப்பட்ட இருமல் மருந்துகள் பறிமுதல்!

மலையோரம் வீசும் காற்று... ரவீணா!

இதயமே இதயமே... நுஸ்ரத் பரூச்சா!

ஆடும் பொம்மை... கௌரி கிஷன்!

SCROLL FOR NEXT