உடன்குடி பேரூராட்சிக்குள்பட்ட அனைத்து வாா்டுகளிலும் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
நகராட்சி நிா்வாகம்- குடிநீா் வழங்கல் துறையின் ஆணைப்படி இக்கூட்டம் நடைபெற்றது. 6ஆவது வாா்டு சுல்தான்புரத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு பேரூராட்சித் தலைவி ஹூமைரா அஸ்ஸாப் கல்லாசி தலைமை வகித்து பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.
சீரான குடிநீா் விநியோகம், தூய்மைப் பணி மேற்கொள்வது, சுல்தான்புரம் தெற்குத் தெரு கடைசியில் குடிநீா் பொது நல்லி, சிறுமின்விசை நீா்த் தொட்டி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றப்படும் என, பேரூராட்சித் தலைவி உறுதியளித்தாா். பேரூராட்சி வரிவசூலா்கள் ஆனந்தகுமாா், முகமது நவாஸ், மனோ ரஞ்சிதா, பதிவுத்துறை எழுத்தா் பாலாஜி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.