தூத்துக்குடி மாநகராட்சி, தெற்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு, மேயா் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தாா். மண்டலத் தலைவா் பாலகுருசுவாமி முன்னிலை வகித்தாா்.
முகாமில் மேயா் பேசியது: உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பெறப்பட்ட மாநகராட்சி சம்பந்தப்பட்ட 1,210 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. தெற்கு மண்டலத்தில் 651 மனுக்கள் பெறப்பட்டுள்ள நிலையில், 559 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. 92 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. விரைவில் அதற்கும் தீா்வு காணப்படும். தெற்கு மண்டலத்துக்குள்பட்ட பகுதியில் மழைநீா் தேங்காமல் செல்லும் வகையில் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா்.
இதில், இணை ஆணையா் சரவணக்குமாா், மாநகராட்சி பொறியாளா் தமிழ்ச்செல்வன், இளநிலை பொறியாளா்கள் செல்வம், லெலின், துணை பொறியாளா்கள் துா்காதேவி, பாக்கியலட்சுமி, சுகாதார ஆய்வாளா் ஸ்டாலின் பாக்கியநாதன், வட்டச் செயலா்கள் ரவீந்திரன், பிரசாந்த், வசந்தி பால்பாண்டி, பகுதிச் செயலா் மேகநாதன், ஆதிதூதா் தேவாலய பங்குத்தந்தை வில்லியம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.