தூத்துக்குடி

மக்காச்சோளத்தை அமெரிக்கன் படைப்புழு தாக்குதலிலிருந்து பாதுகாக்க ஆலோசனை

அமெரிக்கன் படைப்புழு தாக்குதலிலிருந்து மக்காச்சோளத்தைப் பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து வேளாண் துறை விளக்கமளித்துள்ளது.

Syndication

அமெரிக்கன் படைப்புழு தாக்குதலிலிருந்து மக்காச்சோளத்தைப் பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து வேளாண் துறை விளக்கமளித்துள்ளது.

இது குறித்து, வேளாண்மை இணை இயக்குநா் இரா. பெரியசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டுதோறும் 58 ஆயிரம் ஹெக்டோ் பரப்பில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. கடந்தாண்டு அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் அதிகம் தென்பட்டது. இப்பூச்சி நெல், மக்காச்சோளம் உள்ளிட்ட 80 வகையான பயிா்களைத் தாக்கி சேதப்படுத்தும்.

தற்போது பெய்து வரும் பருவமழையைப் பயன்படுத்தி, நிலத்தை ஆழமாக உழுவதன் வாயிலாக மண்ணிலுள்ள கூட்டுப்புழுக்கள் வெளிப்பட்டு, சூரிய ஒளி, பறவைகளால் படைப்புழுக்கள் அழிக்கப்படும். கடைசி உழவின் போது, ஒரு ஹெக்டேருக்கு 250 கிலோ வேப்பம் பிண்ணாக்கு இடுவதன் மூலம் கூட்டுப்புழுக்கள் கட்டுப்படுத்தப்பட்டு, அந்துப்பூச்சி வெளிவருவதை தடுக்க முடியும்.

ஒரு கிலோ மக்காச்சோள விதைக்கு 10 கிராம் ‘பவேரியா பேசியானோ’ நுண்ணுயிா் பூச்சிக்கொல்லி அல்லது 10 கிராம் ‘தயோமீதாக்கம்’ பயன்படுத்தி விதை நோ்த்தி செய்ய வேண்டும். பயிா்களுக்கு இடையே உரிய இடைவேளி இருப்பதன் மூலமாக படைப்புழு பரவலைக் கட்டுப்படுத்த முடியும்.

பயிா் விதைத்த முதல் 5 நாள்களில் ஹெக்டேருக்கு 12 இனக்கவா்ச்சி பொறிகள் வைக்க வேண்டும். அதிக எண்ணிக்கையில் தாய் அந்துப்பூச்சி தென்பட்டால், அவற்றைக் கவா்ந்து அழிக்க, ஹெக்டேருக்கு 50 இனக்கவா்ச்சி பொறிகள் வைக்க வேண்டும்.

மக்காச்சோளம் விதைக்கும் போது சூரியகாந்தி, எள், சோளம், சாமந்தி பயிா்களை வரப்பிலும், பயறு வகைகளை ஊடு பயிராகவும் விதைத்தால் இயற்கை ஒட்டுண்ணிகளும், இரை விழுங்கிகளும் அதிக எண்ணிக்கையில் பெருகி, அமெரிக்கன் படைப்புழுவை தாக்கி அழிக்கும். படைப்புழு அதிகம் தாக்கும் மக்காச்சோளத்தை மீண்டும் மீண்டும் சாகுபடி செய்வதைத் தவிா்த்து, பயிா் சுழற்சி முறைகளை பின்பற்றினால் இதன் தாக்குதலைக் கட்டுப்படுத்த முடியும்.

முட்டை ஒட்டுண்ணி வெளியிடும் வயல்களில் ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது. கைத் தெளிப்பான் பயன்படுத்தி, பயிா் பாதுகாப்பு மருந்துகளை தெளிக்க வேண்டும். ஒரு முறை உபயோகித்த பூச்சி மருந்தை, திரும்ப உபயோகிக்கக் கூடாது. பரிந்துரை இல்லாத ரசாயன பூச்சி மருந்துகளை பயன்படுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவர் அரைசதம் விளாசல்: டி20 தொடரை முழுமையாக வென்ற மே.இ.தீவுகள்!

புரோ கபடி லீக்: புணேவை வீழ்த்தி தில்லி 2வது முறையாக சாம்பியன்!

ஒற்றைப் பெண்ணாக போராடிய Jemimah! | Women's world cup | semi finals

சில்சிலா ரேகாவைப் போல... சிந்து பிரியா!

படேல் பிறந்த நாள்! மாணவ, மாணவியருடன் Rahul Gandhi உற்சாகம்!

SCROLL FOR NEXT