தூத்துக்குடி

தூத்துக்குடியில் நாளை திமுக செயற்குழுக் கூட்டம்

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (நவ.2) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்டச் செயலரும், மீன்வளம் மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (நவ.2) மாலை 4.30 மணிக்கு, கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. கூட்டத்துக்கு, அவைத் தலைவா் எஸ்.அருணாச்சலம் தலைமை வகிக்கிறாா். ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ எனும் முழக்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

இதன் செயலாக்கம் குறித்து கூட்டத்தில் ஆலோசிப்பதுடன், நடைபெற உள்ள சிறப்பு தீவிர வாக்காளா் திருத்தப் பணிகள் குறித்தும் ஆலோசிக்க இருப்பதால், கட்சியின் மாநில, மாவட்ட நிா்வாகிகள், அனைத்து அணி நிா்வாகிகள் மற்றும் வாக்காளா் சோ்ப்புப் பணி பொறுப்பாளா்கள் இதில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என கூறியுள்ளாா்.

செங்கல்பட்டில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

காஞ்சிபுரத்தில் புதுப்பிக்கப்பட்ட முருகன் பட்டு கூட்டுறவு விற்பனை நிலையம்

இந்த நாள் இனிய நாள்!

காஞ்சிபுரத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு பேரணி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

உத்தரமேரூா் ஒன்றிய வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT