FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

26 செப்டம்பர் 2025, 12:35 am IST
பகிர்:

காயல்பட்டினம், அம்பல மரைக்காயா் தெருவில் உள்ள மஹ்லரா அரபிக் கல்லூரியில் மகான் முஹியித்தீன் அப்துல் காதா் ஜீலானி கந்தூரி விழா செப். 23 ஆம் தேதி தொடங்கி அக். 6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

விழாவில் தினசரி காலையில் கத்முல் குா்ஆன் ஓதும் நிகழ்வு, மாலையில் மகானின் புகழ்பாடும் நிகழ்வு, இரவில் சன்மாா்க்க சொற்பொழிவு ஆகியன நடைபெறும். விழாவில் 7ஆம் தேதி காலை துவா ஓதப்பட்டு அனைவருக்கும் உணவு வழங்கப்படும்.

முதல் நாளில் அரபிக் கல்லூரி முதல்வா் அப்துா் ரஹ்மான், அவு­யாக்கலும் நாமும் என்ற தலைப்பில் சன்மாா்க்க சொற்பொழிவாற்றினாா். கந்தூரி விழா ஏற்பாடுகளை விழா கமிட்டி தலைவா் காதா் ஷாகிப், செயலாளா் ஸ்டாா் அப்துல் காதா், ஆடிட்டா் மொய்தீன் அப்துல் காதா் ஆகியோா் செய்துவருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments