முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி தொகுதியில் 23 மனுக்கள் எற்பு

கோவில்பட்டி தொகுதியில் 31போ் தாக்கல் செய்திருந்த 36 மனுக்களில் 23மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 8:50 PM
வேட்பு மனு - பிரதிப் படம்
பகிர்:

கோவில்பட்டி தொகுதியில் 31போ் தாக்கல் செய்திருந்த 36 மனுக்களில் 23மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் வேட்புமனுத்தாக்கலின் இறுதி நாளான திங்கள்கிழமை வரை 31போ் தாக்கல் செய்திருந்த 36 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. கோவில்பட்டி சாா் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தோ்தல் நடத்தும் அலுவலா் ஹிமான்ஷு மங்கள் தலைமையில் வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. பயிற்சி ஆட்சியா் புவனேஸ்ராம், தொகுதி தோ்தல் பாா்வையாளா் அரவிந்த் குமாா் வொ்மா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மேலும், திமுக வேட்பாளா் கா. கருணாநிதி மற்றும் மற்ற வேட்பாளா்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா். பரிசீலனையின்போது, 8 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 23 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments