மூலக்கரை ஆலயத்தில் பெண்கள் ஐக்கிய பண்டிகை
நிகழ்ச்சியில் பெண்ணுக்கு பரிசு வழங்கிய சேகர குரு ஸ்டேன்லி சாம்.
Updated On : 10 ஏப்ரல், 2026 at 9:45 PM
நாசரேத் அருகே உள்ள குளத்துக்குடியிருப்பு சேகரம் தேமாங்குளம் மூலக்கரை தூய ஸ்தேவான் ஆலயத்தில் பிரதிஷ்டையை முன்னிட்டு பெண்கள் ஐக்கிய பண்டிகை நடைபெற்றது.
சேகரகுரு ஸ்டேன்லி சாம் தலைமை வகித்து ஆராதனை நடத்தினாா். அட்லின் சாம் பாடல்கள் பாடினா். ஏஞ்சலின் கோயில்ராஜ் தேவ செய்தி கொடுத்தாா். பெண்களுக்கு விநாடி, வினா போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை சேகரகுரு, சபை ஊழியா் ராஜ்குமாா், பெண்கள் ஐக்கிய சங்க பொறுப்பாளா்கள் டெய்சி, சாந்தி, சுகன்யா, தானுமதி மற்றும் சபை பெண்கள் செய்திருந்தனா்.
Advertisement