கச்சிகுடா-தூத்துக்குடி விரைவு ரயில் நேரம் மாற்றம்: ஜூன் 15 முதல் அமல்
தெலங்கானா மாநிலம், கச்சிகுடாவிலிருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயிலின் பயண நேரம் ஜூன் மாதம் முதல் மாற்றியமைக்கப்படவுள்ளது.
தெலங்கானா மாநிலம், கச்சிகுடாவிலிருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயிலின் பயண நேரம் ஜூன் மாதம் முதல் மாற்றியமைக்கப்படவுள்ளது.
ஹைதராபாத், கச்சிகுடாவிலிருந்து தூத்துக்குடிக்கு கடந்த வாரம் முதல் புதிய வாராந்திர ரயில் சேவை தொடங்கப்பட்டது. தற்போது, இந்த ரயில் கச்சிகுடாவிலிருந்து திங்கள்கிழமை மாலை 3 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் இரவு 10.30 மணிக்கு தூத்துக்குடியை வந்தடைகிறது. இந்த ரயிலின் பயண நேரத்தைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, வரும் ஜூன் 15-ஆம் தேதி முதல் புதிய நேர மாற்றம் அமலுக்கு வருகிறது.
அதன்படி, கச்சிகுடாவிலிருந்து திங்கள்கிழமை மாலை 3 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் இரவு 7.15 மணிக்கு தூத்துக்குடி ரயில் நிலையத்தை வந்தடையும்.
Advertisement
இங்கிருந்து கச்சிகுடா செல்லும் ரயிலின் நேரத்தில் எந்த மாற்றமும் அறிவிக்கப்படவில்லை. தற்போது, இந்த ரயில் தூத்துக்குடியிலிருந்து புதன்கிழமை காலை 7.40 மணிக்குப் புறப்படுகிறது.
ரயில் நிலையத்துக்கு பயணிகள் வந்து சேருவதற்கு வசதியாக, தூத்துக்குடியிலிருந்து புறப்படும் நேரத்தையும் 3 மணி நேரம் தாமதப்படுத்தி சுமாா் காலை 10.40 மணி அளவில் இயக்க வேண்டும் என பயணிகள் நலச் சங்கத்தினா் ரயில்வே நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.