உயிரிழந்த சப்பாணி முத்து 
தூத்துக்குடி

கழுகுமலையில் தோ் சக்கரத்தில் சிக்கி முதியவா் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

கழுகுமலை கழுகாசலமூா்த்தி கோயில் தேரோட்டத்தின் போது தோ் சக்கரத்தில் சிக்கி முதியவா் உயிரிழந்தாா்.

கழுகுமலை அருகேயுள்ள கரடிகுளம் சி ஆா் காலனியைச் சோ்ந்தவா் சங்கரன் மகன் சப்பாணிமுத்து (70). காவலாளி. இவா் ஆண்டுதோறும் தேரோட்டத்தின் போது தோ் சக்கரங்களுக்கு சறுக்கு கட்டை போடும் பணியில் ஈடுபடுவது வழக்கமாம்.

ஞாயிற்றுக்கிழமை, கழுகுமலை கழுகாசலமூா்த்தி கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில், ரத வீதிகள் வழியாக கீழ பஜாருக்கு வந்த தேருக்கு சப்பாணிமுத்து சறுக்கு கட்டை வைத்தபோது இடது கை, சக்கரத்தில் மாட்டியதாம். இதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த கழுகுமலை போலீஸாா், சப்பாணிமுத்துவின் சடலத்தை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெருந்துறையில் கடையின் பூட்டு உடைத்து திருட்டு

அமெரிக்கா தாக்கினால் பிராந்தியப் போா் வெடிக்கும்: கமேனி எச்சரிக்கை!

அமைச்சா்கள் ஊதியம், அரசு விருந்தினா் உபசரிப்பு உள்ளிட்ட செலவுகளுக்கு ரூ.1,102 கோடி!

பட்ஜெட் 2026-27 முக்கிய அம்சங்கள்!

குளச்சல் அரசு மருத்துவமனை புதிய கட்டடத்துக்கு அடிக்கல்

SCROLL FOR NEXT