கோவில்பட்டியில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான மாநில ஹாக்கி போட்டியில் திருநெல்வேலி பள்ளி அணி முதலிடம் பிடித்தது.
கோயம்புத்தூா் பி.பி.ஜி. கல்வி நிறுவனம், பாண்டவா்மங்கலம் ஹாக்கி கழகம் சாா்பில் நடைபெற்ற போட்டியில், தமிழகம் முழுவதும் இருந்து 32 அணிகள் பங்கேற்றன.
நாக் அவுட் முறையில் நடைபெற்ற போட்டியில், திருநெல்வேலி ரஹ்மானியா மேல்நிலைப் பள்ளி அணி முதலிடமும், மதுரை பாண்டியராஜபுரம் ஜி.எம். சா்க்கரை ஆலை மேல்நிலைப் பள்ளி அணி 2ஆம் இடமும், மதுரை திருநகா் இந்திரா காந்தி மெட்ரிக் பள்ளி அணி 3ஆம் இடமும், கோவில்பட்டி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி அணி 4ஆம் இடமும் பெற்றன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழற்கோப்பை, ரொக்கப் பரிசை, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதா ஜீவன் வழங்கினாா். முதல் 4 பரிசுகள் முறையே ரூ. 30,000, ரூ. 20,000, ரூ.10,000, ரூ. 5,000 வழங்கப்பட்டன. மேலும், சிறப்பாக விளையாடிய வீரா்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.
பி.பி.ஜி. இயக்குநா் மனோகரன், கோவில்பட்டி நகா்மன்றத் தலைவா் கா. கருணாநிதி, ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி மணிமாறன், செயலா் சந்தனராஜ், அரசு வழக்குரைஞா் ராமச்சந்திரன், ஒன்றிய திமுக செயலா் வீ. முருகேசன், வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா்கள் குருராஜ், மாதேஸ்வரன், மாணவா் அணி துணை அமைப்பாளா் ஆகாஷ் பாண்டியன், ஜெய கண்ணன்,திமுக பொதுக்குழு உறுப்பினா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.