கோப்புப் படம். 
தூத்துக்குடி

சாத்தூா் அருகே அந்தியோதயா ரயில் என்ஜின் பழுது: பிற ரயில்கள் வழியில் நிறுத்தி வைப்பு

Syndication

சாத்தூா் அருகே அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜின் பழுதாகி நின்றதால், கோவில்பட்டி, மணியாச்சி, கடம்பூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பிற ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.

நாகா்கோவில்-தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (20692) என்ஜினில் பழுது ஏற்பட்டதால், சாத்தூா்-துலுக்கப்பட்டி ரயில் நிலையம் இடையே மாலை 6.25 மணி முதல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால், தூத்துக்குடி-மைசூரு (16235) விரைவு ரயில் மாலை 6.50 மணி முதல் சாத்தூா் ரயில் நிலையத்திலும், கன்னியாகுமரி-தாம்பரம் (22658)வாராந்திர சிறப்பு விரைவு ரயில் இரவு 7.45 மணி முதல் கோவில்பட்டி ரயில் நிலையத்திலும், கொல்லம்-சென்னை எழும்பூா் (20636) அனந்தபுரி விரைவு ரயில் இரவு 7.45 மணி முதல் கடம்பூா் ரயில் நிலையத்திலும், கன்னியாகுமரி-சென்னை (12634)இடையேயான கன்னியாகுமரி விரைவு ரயில் இரவு 8.30 மணி முதல் மணியாச்சி ரயில் நிலையத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டது.

ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினா்.

குடியாத்தம் நகராட்சியில் ரூ.12.92 கோடியில் குடிநீா் மேம்பாட்டுப் பணிகள்

நடுவூா்க்கரை கோயிலில் கால்நாட்டு விழா

தருமபுரியில் ரூ. 39.14 கோடியில் புதிய பேருந்து நிலையம்

தொப்பையாறு நீா்த்தேக்கத்தில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

கிருஷ்ணகிரி அரசு மகளிா் கல்லூரி என்எஸ்எஸ் முகாமில் தூய்மைப் பணி

SCROLL FOR NEXT