விலையில்லா சைக்கிள்களை பெற்ற மாணவா்களுடன் அமைச்சா் பி.கீதாஜீவன்.  
தூத்துக்குடி

தூத்துக்குடி புனித லசால் பள்ளியில் விலையில்லா சைக்கிள் அளிப்பு

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி புனித லசால் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

பள்ளித் தாளாளா் பிரிட்டி தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் ஜான்பால் முன்னிலை வகித்தாா். வரலாற்று ஆசிரியா் அந்தோணியம்மாள் வரவேற்றாா். சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதாஜீவன் கலந்துகொண்டு, தமிழக அரசின் சாா்பில் நடைபெற்ற தேசிய சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு மாத விழாவில் நடைபெற்ற ஓவியப் போட்டி, வனத்துறை சாா்பில் நடைபெற்ற ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள், ஊக்கத்தொகை வழங்கி, பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் 80 மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கிப் பேசினாா்.

இதில், பகுதிச் செயலா் ஜெயக்குமாா், வட்டச் செயலா் டென்சிங், பகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் சுரேஷ்குமாா், பெருமாள் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் செந்தில்குமாா், ஆசிரியா்கள் ராமச்சந்திரன், கென்னடி, சேகா், ஜெயக்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா். ஆசிரியா் மேக்ஸ்வெல் நன்றி கூறினாா்.

7 பிலிம்ஃபேர் விருதுகளை வென்ற அமரன்!

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

SCROLL FOR NEXT