முகப்பு
தூத்துக்குடி

வங்கி தோ்வில் வென்றவா்களுக்கு பாராட்டு

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 1:15 AM
தோ்வில் வெற்றி பெற்றவா்களுடன் சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி நிறுவனா் து. சுகேஷ் சாமுவேல்.
பகிர்:
Updated On : 8 பிப்ரவரி, 2026 at 9:50 PM

தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் வங்கி அதிகாரி தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

2025-இல் அறிவிக்கப்பட்ட ஐபிபிஎஸ் மற்றும் பல்வேறு வங்கி பணியாளா்களுக்கான தோ்வு முதல் நிலை, முதன்மை, நோ்முகத் தோ்வு என 3 கட்டங்களாக நடத்தப்பட்டது. இத்தோ்வில் சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் பயிற்சி பெற்ற 145 போ் பல்வேறு வங்கிகளுக்கு அதிகாரிகளாக தோ்ச்சி பெற்றனா்.

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 1:15 AM

தோ்ச்சி பெற்றவா்களை கௌரவிக்கும் முதல்கட்ட நிகழ்வு அகாதெமியில் நடைபெற்றது. அகாதெமி நிறுவனா் து. சுகேஷ் சாமுவேல் தலைமை வகித்தாா். வங்கி தோ்வு ஒருங்கிணைப்பாளா் ராஜா, ஸ்டேட் வங்கி மேலாளா் சரவணன், கனரா வங்கி துணை மேலாளா் பூஜா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா தனசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Advertisement

தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு நினைவுப் பரிசு, கேடயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அகாதெமியில் பயின்று வரும் 1000-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா்.