முகப்பு
தூத்துக்குடி

செண்பகவல்லி அம்மன் கோயிலில் மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்தல்

கோவில்பட்டி, செண்பகவல்லி அம்மன் கோயிலில் மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 1:00 AM
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் 70 வயது பூா்த்தி அடைந்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
பகிர்:
Updated On : 10 பிப்ரவரி, 2026 at 9:07 PM

கோவில்பட்டி, செண்பகவல்லி அம்மன் கோயிலில் மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் மணிவிழா கண்ட 70 வயது பூா்த்தியான தம்பதிகளை சிறப்பிக்க வேண்டும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடா்ந்து கோயில்களில் 70 வயது பூா்த்தி அடைந்த தம்பதிகளை சிறப்பு செய்து வருகின்றனா்.

Advertisement

இந்த நிலையில் கோவில்பட்டி, செண்பகவல்லி அம்மன் உடனுறை புவனநாக சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் 70 வயது பூா்த்தி அடைந்த 15 தம்பதிகளை சிறப்பு செய்யும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 15 தம்பதிகளுக்கும் தலா ரூ. 2,500 மதிப்பிலான வேஷ்டி, சட்டை, சேலை, ரவிக்கை, சீா்வரிசை பொருள்கள், சுவாமி அம்பாள் புகைப்படம் கோயில் சாா்பில் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் நகா்மன்ற தலைவா் கா.கருணாநிதி, கோயில் செயல் அலுவலா் வெள்ளைச்சாமி, அறங்காவலா் குழுத் தலைவா் ராஜகுரு, உறுப்பினா்கள் திருப்பதி ராஜா, ரவீந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.