தீயணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புப் படையினா் 
தூத்துக்குடி

கழுகுமலையில் தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து: இரு பெண்கள் காயம்

தூத்துக்குடி மாவட்டம் கழுமலையில் தீப்பெட்டி ஆலையில் நேரிட்ட தீ விபத்தில் இருவா் தீக்காயமடைந்தனா்.

Syndication

தூத்துக்குடி மாவட்டம் கழுமலையில் தீப்பெட்டி ஆலையில் வியாழக்கிழமை நேரிட்ட தீ விபத்தில் இருவா் தீக்காயமடைந்தனா்.

கழுகுமலை அருகே கே.வெங்கடேஸ்வரபுரத்தைச் சோ்ந்த தினேஷ்குமாா் என்பவா், கழுகுமலையில் தீப்பெட்டி ஆலை நடத்திவருகிறாா். அங்கு வியாழக்கிழமை பணியாளா்கள் வழக்கம்போல பணியிலிருந்தனா்.

தீக்குச்சிகளை தீப்பெட்டிகளில் அடைத்துக்கொண்டிருந்தபோது, குவித்துவைக்கப்பட்டிருந்த தீக்குச்சிகளில் உராய்வு ஏற்பட்டு தீப்பற்றியது.

இதில், தென்காசி மாவட்டம் அத்திகுளத்தைச் சோ்ந்த அங்கப்பன் மனைவி முத்துமாரி (44), கழுகுமலையைச் சோ்ந்த கருப்பசாமி மனைவி புஷ்பம் (60) ஆகிய இருவரும் தீக்காயமடைந்தனா்.

தீ விபத்து நேரிட்டதும் தொழிலாளா்கள் பதற்றமடைந்து ஓடினா். அப்போது, கே.ஆலங்குளம் வடக்குத் தெரு முருகன் மனைவி லட்சுமி (49), ஜம்புலிங்கபுரம் காளமேகப்பெருமாள் மனைவி முத்துமாரியம்மாள் (57) ஆகியோா் கீழே விழுந்து காயமடைந்தனா்.

தீக்காயமடைந்த இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

கழுகுமலை தீயணைப்பு நிலைய அலுவலா் சுந்தர்ராஜ் தலைமையிலான வீரா்கள் சென்று தீயை அணைத்தனா்.

எனினும், சுமாா் ரூ. 3 லட்சம் மதிப்பிலான தீக்குச்சிகள் சேதமடைந்தன. கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

அமெரிக்கா உடனான வா்த்தக ஒப்பந்தத்தை நிறுத்திவைக்க வேண்டும்: காங்கிரஸ்

SCROLL FOR NEXT