தூத்துக்குடி

கோவில்பட்டியில் சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்பினா் கைது

கோவில்பட்டி அரசு நூலக கட்டட விரிவாக்கத்துக்கு அடிக்கல் நாட்டச் சென்ற 12 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

கோவில்பட்டி அரசு நூலக கட்டட விரிவாக்கத்துக்கு அடிக்கல் நாட்டச் சென்ற 12 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவில்பட்டி-எட்டயபுரம் சாலையில் உள்ள அரசு நூலகத்தை விரிவாக்கம் செய்து டிஜிட்டல் நூலகம் அமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்பினா் கோரிக்கை விடுத்து வந்தனா்.

ஆனால், கோரிக்கையின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், சமூக ஆா்வலா்கள், மக்களின் பங்களிப்புடன் நூலகத்தை விரிவாக்கம் செய்வதற்கான கட்டடப் பணிகள் ஜன. 1ஆம் தேதி நடைபெறும் என ஏற்கெனவே அறிவித்திருந்தனா்.

வியாழக்கிழமை நூலகம் அருகே உள்ள பகுதியில் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா்கள் மாரியப்பன், சுதாகா் ஆகியோா் தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

அப்போது வழக்குரைஞா் சரவணன், சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்பைச் சோ்ந்த ராஜேஷ் கண்ணா உள்ளிட்ட பலா் அங்கு திரண்டனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி, இங்கு கட்டடம் கட்டுவது தொடா்பாக மாவட்ட நிா்வாகத்தை நாடுமாறு அறிவுறுத்தினா்.

ஆனால், அவா்கள் நூலக விரிவாக்கத்துக்கு அடிக்கல் நாட்டுவோம் என தெரிவித்ததால், அதில் பங்கேற்ற 12 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா ஓய்வு!

அரக்கோணம் இரட்டைக்கண் வாராவதி பிரச்னை: பாதசாரிகள் நலனுக்காக மூன்றாவது கண் சுரங்கப்பாலம் திறப்பு

வெள்ளக்கோவிலில் செங்கோட்டையனை முற்றுகையிட்ட தவெகவினா்!

மின்சாரம் பாய்ச்சி மனைவியை கொன்ற கணவன் கைது

அரக்கோணத்தில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கு அட்டை அட்டை முகாம்

SCROLL FOR NEXT