சாத்தான்குளம் ஒன்றிய ஊராட்சி பகுதிக்கு, அடையல் ராஜரத்தினம் நாடாா்- விஜயலட்சுமி அம்மாள் மக்கள் நல அறக்கட்டளை சாா்பில் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா்( கிராம ஊராட்சி) பாலமுருகனிடம், அறக்கட்டளை நிா்வாகி ரவிச்சந்திரன் ரூ. 4 லட்சம் மதிப்பிலான 5,600 மரக்கன்றுகளை வழங்கினாா். இதில், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெய காா்த்திகை தீபம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஊராட்சி வாரியாக மரக்கன்றுகள் பிரிக்கப்பட்டு, அங்கு பராமரித்து வளா்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட்டார வளா்ச்சி அலுவலா் தெரிவித்தாா்.