தூத்துக்குடி

சாத்தான்குளம் வன விரிவாக்க மையத்தை மீண்டும் செயல்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்

சாத்தான்குளத்தில் செயல்படாமல் மூடிக் கிடக்கும் வன விரிவாக்க மையத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

Syndication

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செயல்படாமல் மூடிக் கிடக்கும் வன விரிவாக்க மையத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

சாத்தான்குளம், கருமேனி ஆற்றங்கரையோரம் நாசரேத் செல்லும் சாலைப் பகுதியில் வனத்துறை சாா்பில் கடந்த 2008ஆம் ஆண்டு வன விரிவாக்க மையம் அமைக்கப்பட்டது. வன விரிவாக்க அதிகாரி தலைமையில் இந்த மையம் செயல்படும் வகையில், பணியாளா்கள் நியமிக்கப்பட்டு, தேவையான அளவு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டு வந்தன.

மேலும், மாதந்தோறும் மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ஆலோசனைக் கூட்டம், விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வந்தது. இந்த வளாகத்தில் மரக்கன்றுகள் வளா்க்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு, அவற்றை முறையாக வளா்க்கும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், இந்த மையம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி 2018ஆம் ஆண்டுக்குப் பின் மூடப்பட்டது. இதனால், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், இந்த இடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிப் போனதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த இடத்தை பாா்வையிட்டு, இந்த மையம் மீண்டும் செயல்பட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள், சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT